Friday, July 3, 2009

Thursday, July 2, 2009

காதலும் திருமணமும்


திருமணத்திற்கு முன்
காதலன்: ஆம், கடைசிவரை காத்திருப்பது என்பது மிகவும் கடின மான ஒன்று
காதலி: அப்போ என்னை மறந்து விடப்போகிறாயா?
காதலன்: சேச்சே, அதெல்லாம் நான் ஒருநாளும் நினைத்தது கூட கிடையாது
காதலி: நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா
காதலன்: அதில் என்ன சந்தேகம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு
காதலி: என்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டியே ?
காதலன்: மாட்டேன், ஏன் இவை எல்லாம் கேட்கிறாய்
காதலி: என்னை முத்தமிடுவாயா?
காதலன்: சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
காதலி: என்னை அடிப்பாயா?
காதலன்: பைத்தியமா நீ, நான் ஒன்றும் அந்த மாதிரி ஆளு இல்லை
காதலி: நான் உன்னை நம்பலாமா?
காதலன்: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
காதலி: டார்லிங்
திருமணத்திற்கு பின்
மிகவும் சுலமான ஒரே வழி கீழிருந்து மேலாக படிக்கவும்
பின் குறிப்பு:
எல்லாரும் நல்லாத்தான் படிச்சீங்க. அப்பறமும் ஏன் முறைக்கிறீங்க?
ரம்யா: அண்ணா ராகவன் அண்ணா எல்லாரும் என்னை அடிக்க வராங்க, காப்பாத்துங்கண்ணா
ராகவன் : ஏம்மா, எல்லாரும் அப்படி ஒன்னை வெரட்டறாங்க, நீ என்ன தப்பு செய்தே?
ரம்யா: ஒண்ணுமே செய்யலை அண்ணா, கல்யாணத்துக்கப்புறம்ன்னு ஒரு வரி போட்டேன் அதுலே வந்த வம்புதான்.
ராகவன்: போங்கப்பா ரம்யா சின்ன பொண்ணுதானே, மன்னிச்சுடுங்கப்பா
ரம்யா: தேங்க்ஸ் அண்ணா
இது சும்மா எழுதியது யாரும் தவறாக எடுத்து கொள்ளக்கூடாது

சிகரம் தொட்ட காதல்!!

"ஏண்டா சரவணா, ஒரு மாதிரி இருக்கே? மேனேஜர்கிட்டே நீ திட்டு வாங்கி இன்னைக்கிதான் பார்த்தேன். என்ன பிரச்சனை? மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு மருகாதே. வெளியே சொன்னா மனப்பாரம் குறையும்." என்றான் சரவணின் நண்பன் நந்து.
"மனசே சரி இல்லைடா. பழைய நினைவுகளின் அதிர்வுகள் மனசோட ஓட்டத்தை நிறுத்திடுச்சுடா. வேலையிலே கவனம் செலுத்த முடியலை. அதான் லீவு போட்டு போயிடலாமான்னு யோசிக்கிறேன்.""என்னாச்சு?""அவள் என்னைவிட்டு போய் வருஷம் மூணு ஆச்சுடா"
"உன்னோட தனிப்பட்ட விஷயங்களில் நான் தலையிடுவதாக நினைக்காதேடா, அப்படி என்ன உன் வாழ்க்கையில் நடந்தது? என்மீது நம்பிக்கை இருந்தா உன் கவலைகளை என்னிடம் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம் சரவணா" "நீ என்னோட நண்பன்டா! உங்கிட்டே பகிர்ந்துகரதுலே தப்பே இல்லை! இருந்தாலும் என் கஷ்டம் என்னோட போகட்டும்னுதான்....."
"என் தேவதை என்னோட கல்லூரிதான். எனக்கு ஒரு வருடம் ஜூனியர். கல்லூரி விழாவில் பாடினாங்க. பாட்டு மட்டும் அசத்தல் இல்லே; அவங்களும் அசத்தல் ரகம்தான். அறிமுகப் படுத்தியது என்தோழி. அவளிடமிருந்து எனக்கு கிடைத்த பரிசு மெல்லிய புன்சிரிப்பு. அவளின் அமைதியான முகம் அன்றலர்ந்த தாமரைபோல் இருந்தது. அன்றே என் மனதிற்குள் அவளின் நினைவுகள் சாமரம் வீசத் தொடங்கிவிட்டன. அதற்குப்பிறகு அவளை சந்திக்கும் வாய்ப்பும், பேசும் சூழ்நிலையும் அமையவில்லை. என்னோட கல்லூரி படிப்பும் முடிந்துவிட்டது. அவளின் பசுமையான நினைவுகளை ஆனந்தமாகச் சுமந்தேன் என்றுதான் கூற வேண்டும்."
"என்ன ஆச்சர்யம் பாரு! எதிர்பாராதவிதமாக ஒரு நாள் எனது அலுவலகத்திற்கே வேலைக்கு வந்தாள். அங்கே நான் அவளுக்கு சீனியர். ஆதலால் வேலைகள் அனைத்தும் சொல்லித்தரவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.அதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. நெருக்கத்தின் விளைவு இருவருள்ளும் ஏற்பட்ட ரசாயன மாற்றம் இருவராலும் கண்டு கொள்ளப்பட்டது. விளைவு? பரஸ்பரம் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். எல்லாமாகிப் போன என் தேவதை என்றோ என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஷயம் எனக்கு மட்டும்தானே தெரியும்!"
"அலுவலக வேலைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவா இருந்திருக்கின்றோம். அலுவலக வேலை தவிர எங்கேயும் வெளியே போகமாட்டோம். வேலை அதிகமானால் சில நாட்கள் இரவு நேரமாகிவிடும். அந்த சமயம் அலுவலகத்தில் அவளுக்காக காத்திருந்து இருவரும் சேர்ந்தே வீட்டுக்கு கிளம்புவோம். எங்கள் காதல் எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும். அலுவலகத்தில் பாகுபாடின்றி அனைவருக்கு உதவிகள் செய்வேன். ஷாலினிக்கு செய்த உதவிகளும் அதே கோணத்தில்தான் பார்க்கப்பட்டன.. "
"அப்படித்தான் ஒரு நாள்.." சரவணனின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.
அலுவலகம் முடிந்து அனைவரும் கிளம்பி விட்டார்கள். ஷாலினி அவசரமாக மின்னஞ்சல் தயார் செய்து கொண்டிருந்தாள். நாளைய வேலையின் ஆரம்பம்தான் இந்த அவசரமான மின்னஞ்சல். சரவணன் வேலைகள் முடிந்ததால் அவள் அருகே வந்தமர்ந்து சில மாற்றங்களை கூறிக் கொண்டிருந்தான். ஒரு வழியாக வேலை முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் இருவரும் கிளம்பினார்கள். "ஏன் ஷாலு, ரொம்ப சோர்வா இருக்கே ?" "தலை வலிக்குதுங்க ""வா, பக்கத்திலே இருக்கிற ஹோட்டல்ல காபி குடிச்சிட்டு உன்னை ஆட்டோலே ட்ராப் பண்றேன்."
"வேண்டாம், யாராவது பாத்துடுவாங்க. நம் விஷயத்தை நல்ல முறையில் அப்பாவிடம் சொல்லி சம்மதம் வாங்கணும். வேறு யாராவது பார்த்து அப்பாகிட்டே சொல்லி காரியம் கெட்டுடக்கூடாது." "பரவா இல்லே வா. தலைவலிக்குதுன்னு சொல்றே. அப்படியே உன்னை விட்டுட்டு போகச் சொல்றியா?"
"சரி, வாங்க போலாம் ஆனா சீக்கிரம் கிளம்பிடனும். ஐயோ! எங்க அண்ணன்""எங்கே?""ஐயோ என்னை பாத்துட்டானே! கிட்டே வரான்""ஷாலினி இங்கே எதுக்கு வந்தே? இது யாரு?" "இல்லே இவரு எங்க ஆபீஸ்.. எனக்கு தலை வலிக்குதுன்னு காபி குடிக்க வந்தோம்" என்று தடுமாறினாள் ஷாலினி "சரி குடிச்சுட்டு வா. வீட்டுக்கு போலாம்""தலை வலிக்குதுன்னு சொன்னாங்க ஷாலினி. காபி குடிக்கலாம்னு வந்தோம் ...." "நான் அவினாஷ். ஷாலினியோட அண்ணன். பரவாயில்லை வாங்க சேர்ந்தே காபி குடிக்கலாம்" என்று மிகவும் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தான் அவினாஷ். "நான் சரவணன்! நன்றி உங்களோட புரிதலுக்கு" காபி குடிச்சிட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க.
"அடுத்தநாளும், அதற்கடுத்தநாளும் ஷாலினி அலுவலகம் வரவில்லை. எனக்கு ரொம்ப பயமா போய்டுச்சு. ஆனா, அன்று மாலை அவினாஷ் வந்தான். அவங்க அப்பா என்னை பார்க்கனும்னு அழைத்து வரசொன்னதாகச் சொன்னான். நானும் பார்க்கச் சென்றேன். எனது தேவதை என்னை வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தாள். மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். என்ன என்று கேட்டேன். சரியாக பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டாள்."சில நிமிடங்களில் காபியும் பிஸ்கட்டும் வந்தது. கொஞ்ச நேரத்தில் ஷாலினியின் அப்பா வந்தார். மரியாதை நிமித்தம் எழுந்து நின்றேன். "உக்காருப்பா காபி சாப்பிடு! ஷாலினி நீயும் இப்படி வந்து உக்காரு.""பரவா இல்லை சார், நான் இப்போதான் அலுவலகத்திலே குடிச்சிட்டு வந்தேன்""இங்கே பாருப்பா சரவணா! என்பொண்ணு எல்லா விவரத்தையும் என்கிட்டே சொல்லிட்டா.." "இல்லேங்க சார்! என்னோட பெற்றோர்களை அழைத்து வந்து பெண் கேட்க வேண்டும்" என்று முடிக்கு முன்னே..
"அதெல்லாம் இருக்கட்டும், என்னோட சூழ்நிலையை உனக்கு சொல்லிடறேன். ஷாலினி அழகான, அடக்கமான பொண்ணு. பாக்கறவங்களுக்கு அவளை ரொம்பப் பிடிச்சிடும் அதெல்லாம் உணமைதான். இப்போது அவளுக்குத் திருமணம் செய்வதாக இல்லை."
"உங்களோட காதல் தவறுன்னு சொல்லலை. உன்னுடன் கூடிய ஷாலியின் நட்பை குறித்து உங்கள் அலுவலகத்திலே விசாரித்தேன். எல்லாரும் உங்களைப் பற்றி நல்ல விதமாகத்தான் கூறினார்கள். கண்ணியமாகத்தான் உங்கள் நடவடிக்கைகள் இருந்திருக்கின்றது."
"சரவணா! உங்க வீட்டிலேயும் காதல் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டங்காளாமே? உங்க தாய்மாமன் கூறி இருக்கிறாரு . உங்க ஊரிலே எங்க சொந்தக்காரங்க இருக்காங்க.உங்கள் குடும்பம் குறித்து விசாரித்ததில் இந்த வெவரம் தெரிஞ்சுது. காதலுக்கு நான் எதிரி இல்லை. ஆனால் மூன்று பெண்களைப் பெற்ற மத்தியதர குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண தந்தையாகப் பேசுகிறேன். நான் எந்த முடிவெடுத்தாலும் எனது சமூகத்திற்குக் கட்டுப்பட்டுதான் எடுப்பேன்."
"சார்..."
"இரு சரவணா நான் இன்னும் பேசி முடிக்கலை, இருமனமும் ஒத்துப் போனால் மட்டும் நிறைவான வாழ்வைத்தராது... அனைவரின் சந்தோஷத்திலும் மலர்வதுதான் வாழ்க்கை"
"இருவர் குடும்பத்திலும் சம்மதிக்கலைன்னா என்ன செய்ய போறீங்க? ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவீங்களா? அப்படி செய்தால் தாயில்லாம வளர்ந்த பொண்ணு இப்படி பண்ணிட்டாளேன்னு ஷாலினியை எல்லாரும் தவறாகப் பேசுவாங்களே அதை யோசிச்சீங்களா? மூத்தவள் எப்படி இருக்கிறாளோ அதை வைத்துதான் அவ தங்கச்சிங்களையும் எடை போடுவாங்க அதுவும் உண்மைதானே?" என்று மூச்சு விடாமல் பேசி நிறுத்தினார் நாராயணன். (ஷாலினியின் தந்தை) ."உங்க நிலைமை எனக்கு புரியுது சார், எனது பெற்றோர்களை சம்மதிக்க வைப்பது எனது பொறுப்பு. எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க "
"அது இல்லைப்பா அவங்க சம்மதித்தாலும் நான் சம்மதிக்க முடியாதே! எங்க சமூகத்தினர் இந்த திருமணத்திற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். அடுத்து எனது ரெண்டு பெண்களின் வாழ்க்கையும் இதில் அடங்கி இருக்கு. சூழ்நிலையை நீயே கொஞ்சம் யோசி."
"அதே போல் யாரும் ஒத்துக் கொள்ளாமல் திருமணம் செய்து செய்து கொண்டாலும் உங்கள் வாழ்க்கை சிறக்க வாய்ப்பில்லை. இரு தரப்பு பெற்றோர்களும் ஒதுக்குவார்கள், இரு தரப்பு உறவினர்களும் ஏற்றுக் கொள்வது கடினம். தேவைகள் எந்த ரூபத்திலும் வரலாம். நண்பர்கள் எவ்வளவு நாட்கள்தான் உங்களுக்கு உதவுவார்கள். "திருமணப்பதிவுஅலுவலகம்" வரை வருவாங்க. அப்புறம் ஒரு ரெண்டு நாட்கள் வரலாம். அதுக்கு மேல் அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போய்டுவாங்க. இதுதான் நிதர்சனம்."
"பணக்கஷ்டம்! கடன் வாங்கி சமாளிக்கலாம். மனகஷ்டம்! எப்படி தீர்க்க முடியும் சரவணா? இருவருகுள்ளே இருக்கும் குற்ற உணர்வு.அதுதான் நமது மனசாட்சி அதற்கு வேஷம் கட்ட தெரியாது. ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்குமே! அதை ஜெயிக்க முடியுமா உங்களால்? உறவினர்களின் பிரிவை அப்பட்டமாக வெளிப்படுத்தும். எவ்வளவு நாட்கள் தனிமையில் போராடுவீர்கள்.?"
"சிக்கல்கள் இல்லாதவரை வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களுக்குள் தீர்க்க முடியாத பிரச்சனைகள் வந்தால் யார் தீர்த்து வைப்பார்கள்? சட்டமா? ஒரே கோணத்தில் இருந்துகொண்டு வாழ்க்கையை சித்தரிக்கக்கூடாது. நான் பேசுவது எதிர் மறையாகத்தான் உங்கள் இருவருக்கும் இப்போது தெரியும். அதனால் என் மீது கோபம் கூட வரலாம். ஆனால் நான் கூறுவது அவ்வளவும் நிதர்சனம்."
"இன்றைய சந்தோஷம் மட்டும் நினைவில் கொண்டு நீங்கள் காரியம் மேற்கொண்டால், நாளைய சந்தோசம் யார் கையில் என்று சிறிதேனும் யோசித்தீர்களா? நீயாவது சொல்லும்மா! ஏன் பேசாமல் இருக்கிறாய்? "அழ அழ சொல்வார் தன மனுஷா சிரிக்க சிரிக்கச் சொல்லுவார் பிறர் மனுஷா" அப்படீன்னு பெரியவங்க சொல்லுவாங்க. இதன் முழு விளக்கம் புரியுதா? நான் கூறுவதில் ஏதேனும் நியாயம் இருப்பது போல் இருவரும் உணர்ந்தீர்களேயானால் சரியான முறையில் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாங்க." "நீங்க சம்மதிச்சீங்கன்னா சரவணன் அவங்க பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிடுவாருப்பா ப்ளீஸ்பா"
"ப்ளீஸ் போட்டு வாழ்க்கையை ஆரம்பிக்ககூடாதும்மா. அவர்கள் சம்மதித்தாலும் நானும், நமது உறவினர்களும் சம்மதிக்க மாட்டோம். இருவரும் யோசிச்சு முடிவெடுங்க. ஷாலினி சரவணனை சாப்பிடச் சொல்லி அனுப்பும்மா. நான் கடை வரை போயிட்டு வரேன். வரேன் சரவணா!"அமைதியை விழுங்கிய நாங்கள் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் நிலைகுலைந்து அமர்ந்திருந்தோம்."ஷாலினி கிளம்பறேன் ""இப்போ என்ன பண்ணறது சரண், எங்க அப்பா இப்படி சொல்லிட்டாரே?"
"உங்க அப்பா அவரோட கவுரவமும், சமுதாயமும்தான் முக்கியம்னு தெளிவா சொல்லிட்டாரு. அடுத்து திருமணமும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்காது. நாம ஓடிபோய் அவமானப்பட வேண்டாம். நாம் இருவரும் சந்திக்கவே இல்லைன்னு நினைச்சுக்குவோம். "உங்களாலே முடியுமா சரண்"
"முடியனும் ஷாலினி! நான் கிளம்பறேன்" முத்துக்களாக உருண்டு ஓடி வந்த கண்ணீரை அவளுக்கு தெரியாமல் மறைத்த அதே நேரத்தில் ஷாலினியும் விம்மிக்கொண்டு உள்ளே ஓடுவதும் சரவணனுக்கு தெரிந்தது. "அதற்குப்பின் அவளை நான் சந்திக்கவில்லை" இந்த ஊருக்கு வந்துட்டேன் என்று பெருமூச்சு விட்டான் சரவணன். "சரவணா என்ன சொல்றதுன்னே தெரியலைடா..! ஆனா உங்க காதல் சிகரத்தைத் தொட்ட காதல்தாண்டா!"

இதை படிச்சுட்டு பெண்கள் முறைபாங்க! ஆண்கள் சிரிப்பாங்க!!

சில தத்துவங்கள் (நா சொல்லப்பா..)
கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! - சாக்ரடீஸ்
தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! - சேம் கினிசன்
எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! - பேட்ரிக் முரே
உலத்திலேயே கடினமான கேள்வி - பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் - சிக்மென்ட் பிராட்.
ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! - பிராங்களின்.
ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. - மில்டன் பியர்லி
சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! - யாரோ
"காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!" - இயான் வுட்
பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே "ஆண்" னிடம்!ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா "பெண்" னிடம்!!
ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:
பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி "நைட்டியில" அலையறது ஏன்னு பிரியல?
337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)
புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி "10 வருடம்" ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!
பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன "மளிகை லிஸ்டை", அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது... ஏங்க?
பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், "அதே தோழியிடம்" 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது... ஏங்க?
பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)
பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது "பிரேக் போடுங்க", "அப்டி வளைக்காதீங்க", "பார்த்து ஓட்டுங்க"ன்னு சொல்றது... ஏங்க?
தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, "தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில" போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே... ஏங்க?(இன்னும் ஏங்க? போட நிறைய இருந்தாலும்.. என்னோட "ஏங்க" எகிறி..எகிறி அடிப்பாங்க என்பதால, இத்தோட நிறுத்திகிறேன்!)
ஆண்கள் மட்டும் ரசிக்கும் தமாசுகள்இரு நண்பர்கள், பார்டியில்...ந1 : "என் மனைவி தேவதை! "ந2 : "நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!"நிச்சயத்தின்போது...மகன்: "யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!"அப்பா: "உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!"மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!"மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!"இரண்டு நண்பர்கள் பாரில்...கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.கண்ணா: ஆஆ.. அப்புறம்?விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"

விபச்சாரம் என்னும் விஷத் தொழில்


விபச்சாரம் செய்வது சரியா ? ஒரினச்சேர்க்கையையே தற்போது சட்டப்பூர்வமாக்கலாமா என்ற கேள்வி உள்ள நிலையில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கலாம் அல்லவா என்று ஒரு அனானனி பதிவர் கேட்டிருந்தார் அவருக்காகவே இந்த பதிவுவிபச்சாரம் இன்று நேற்று தோன்றியதல்ல உலகில் முதன் முதலில் தோன்றிய தொழில் என்று வேடிக்கையாக கூறப்படுவதை கேட்டிருக்கிறேன். பழந்தமிழ் நூல்களில் "விலை மகளிர்", "பொது மகளிர்" என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவர்களுடைய தொழில் "விபச்சாரம்" என்பது சாஸ்திரங்களின் மூலம் குற்றமாகக் கருதப்பட்டாலும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தொழிலை நண்பர் சட்டப்பூர்வமாக்கலாமா ? என்று கேட்டிருந்தார்.முதலில் விபச்சாரத்தை சட்டமாக்கினால் என்னவாகும். பகிரங்கமாக ஒரு வீட்டிலோ அல்லத ஒரு லாட்ஜிலோ நடக்கும். மாணவர்கள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க படிக்க வேண்டிய வயதில் வீட்டில் திருடியாவது விலைமகளிடம் செல்வார்கள். வேலைக்கு போகும் ஆண்கள் வீட்டீற்கு பணம் கொடுக்க மாட்டார்கள் இன்னிக்கு மார்கெட்டில் புதுசா எவள் வந்திருக்கிறாள் எவ்வளவு ரேட் என்று குடும்பத் தலைவர்கள் கணக்கு போடுவார்கள். விலைமகளிடம் இலவசமாய் பெற்ற எய்ட்ஸ் எனும் ஆட்கொல்லி நோயை யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று வீட்டில் உள்ள மனைவிக்கும் பகிர்தளிப்பார்கள். அப்பனும் மகனும், அண்ணனும் தம்பியும் அங்கே சந்திக்கலாம்.ஏன் டி.வில் விளம்பரம் கூட வரலாம். இன்று இந்த பிகர் வந்திருக்கிறது. முன் பதிவுக்கு அணுகவும் என்று இதை வீட்டு கூடத்தில் உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்தபடி ரசிக்கலாம். பெண்கள் அரசே அனுமதித்துள்ளதால் நாளெல்லாம் ஏன் கஷ்டப்படவேண்டு்ம். தினமும் சில மணிநேரம் தானே என்று இத்தொழிக்கு கிளம்பி விட்டால்............நாடு தாங்காது நண்பரே நாடு தாங்காது..... இன்று வெளிநாட்டினர் நம்மை பார்த்து வியக்கும் ஒரெ விஷயம், ஒருவனுக்கு ஒருத்தி எனும் நம் பண்பாடு, கலாச்சாரம் தான். பாலியல் தொழில் மட்டுதான் செய்வார்கள் கருதப்பட்ட திருநங்கைகளே தற்போது சிறு சிறு குடிசை தொழில்கள், வேலைகளுக்கு செல்வது என்று தங்கள் பாதையை மாற்றிக் கொண்டு வரும்போது விபச்சாரத்தை அங்கரிப்பது என்பது கொடுமையானது நம் கலாச்சாரத்திற்கு ஒத்து வராததது.இன்று விபச்சாரத்தை சட்டப்பூர்வமாககினால் நாளை லஞ்சம் ( பாவம் வேண்டும் என்றா வாங்குகிறார்கள் குடும்ப கஷ்டம், அவர்கள் பிழைப்பிற்காக வாங்குறாங்க ) கொள்ளை ( அவன் கிட்ட இருந்தா ஏன் அடுத்தவங்க அடிக்கிறான். ) ரவுடியிஸம் ( என்ன இருந்தாலும் எதி்ர் கால எம்.எல்.ஏ, பாவம் எதிர் வீட்டுகாரன நாம அடிக்க முடியனாலும் அவன் அடிகிறான் இல்ல ) இவை எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாக்கிவிடலாம். இவற்றை எல்லாம் சட்ப்பூர்வமாக்கினால் பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என்கிறீர்களா ? விபச்சாரத்தால் முதலில் பாதிக்கபடுவது ஆணும் அவரை சேர்ந்த குடும்பமும் தான்.கைவிரல் காயம் என்றால் மருந்து போட்டு ஆறவைக்க வேண்டுமே தவிர கைவிரல் இருந்தால் தானே பிரச்சினை என்று வெட்டி விடக்கூடாது. இன்று விபச்சார தடுப்பு சட்டம் என்ற ஒன்று இரு்ப்பதால் தான். நீங்கள் போலீஸில் சிக்கி விடுவோமோ என்ற பயத்திலேயே விலைமகளிடம் செல்லாமல் இருக்கிறீர்கள். ( தனி மனித ஒழுக்கம் உள்ளவர்களை தவிர )இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் எய்ட்ஸ் நோயால் பாதி்க்கப்பட்டவர்கள் அதிகம். அவர்களுக்கெல்லாம் கொசு கடித்தா இந் நோய் வருகிறது. எல்லாம் இந்த விபச்சாரத்தினால்.திருட்டும் ஒரு குற்றம்தான். திருடுபவன் தனது வயிற்று பசிக்காகவும், தனது தேவைகளுக்காவும் திருடுகிறான். திருடுவதை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்வதி்ல்லையோ அது போலத்தான். விபச்சாரமும்.கட்டாயப்படுத்தி இத்தொழிக்கு வரும் பெண்கள் 10% என்றால் விருப்பத்துடன் பணத்துக்காக இத்தொழில் ஈடுபடும் பெண்கள் 90% (எனக்கு தெரிந்த வகையில் ) உழைப்பதற்கு ஆயிரம் தொழில்கள் உள்ளன. அவற்றை இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படுத்தி தர அரசு முன்வர வேண்டும்.இது நான் டிரைனிங்ல இருந்த போது நடந்தது. எனக்கு தெரிந்த காவல் ஆய்வாளர் ஒருவர் இதே போல் ஒரு விபச்சார ரெய்டில் பல பெண்களை கைது செய்து நிலையத்திற்கு கொண்டு வந்தார். வந்தவர்களில் ஒரு பெண் தைரியமாக " எனக்குன்னு ஒரு தொழிலே வேலையோ இருந்தா நான் ஏன் சார் இந்த தொழிக்கு வரேன் " என்று கேட்க ஆய்வாளரோ என்ன நினைதார் என்று தெரிவில்லை. தனது பாக்கெட்டில் இருந்த 800 ருபாய் கொடுத்தார். இந்தா அதை வைச்சு ஏதோ தொழில் செஞ்சு பிழைச்கோ என்று கொடுத்தார். எனக்கோ எவன்டா இவன் பைத்தியகாரனா இருப்பான் போலன்னு நினைச்சு மனசுல வைச்சுக்க முடியாம அவர்கிட்டையே கேட்டுட்டேன் எதுக்கு சார் பணம் கொடுத்தீங்கன்னு. அவர் சொன்னார். " வந்தவ எல்லாம் பைன் எவ்வளவு வரும்ன்னுதான் கேட்டாளுக. ஆனா அந்த பொண்ணு பேசினப்ப ஏண்டா இந்த தொழில்ல இருக்கோம்கிற வெறுப்புதான் இருந்திச்சு அதான் ஏதாவது தொழில் செஞ்சு பொழைச்சுகிட்டும்ன்னு கொடுத்தேன்னார். பின்னால் அதையும் அப்பெண்ணையும் மறந்துவிட்டேன்.பின்னர் ஒரு வருடம் இருக்கும் பணி தொடர்பாக சேலம் சென்ற போது ஒரு தம்மாவது அடிக்கலாம் என்று டீக்கடை பக்கம் ஒதுங்கினேன். தம்மை வாங்கிட்டு கல்லாவில் இருந்த பெண்ணை எங்கயோ பாத்துருக்கனே என்று யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பெண் கேட்டாள். நீங்க போலீசா ? ஆமா இது நான் இப்போ அடையாளம் தெரிந்து விட்டது. அன்று விபச்சார ரெய்டில் சிக்கி ஆய்வாளரிடம் பணம் பெற்ற பெண்தான்.அந்த பெண் ஆய்வாளரிடம் வாங்கிய பணத்தில் சில மாதங்கள் காய்கறி வாங்கி தள்ளுவண்டியில் வியாபரம் செய்திருக்கிறார். பின்னர் கால்கள் ஒத்துழைக்க மறுக்கவே தற்போது டீக்கடை வைத்திருப்பதாக சொன்னார். அன்று எனக்க பைத்தியகாரனாய் தெரிந்த அந்த ஆய்வாளர் இப்போது ஒரு குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்த தெய்வமாக தெரிகிறார்.எனவே அனானி நண்பரே என்று ஒரு பெண் தன்னந்தனியே தன் வாழ்க்கை திறனை உயர்த்தி இவ்வுலகில் வாழும் அளவிற்கு அவளை தயார் செய்கிறோமோ அன்றுதான் இத்தொழில் ஒழியும். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவது என்பது தன் தலையில் கொள்ளிகட்டையை வைத்து தானே சொரிஞ்சுகற மாதிரி

காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை

காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!!
அன்பின் வலைமக்களே!
பெண்களிடம் பேசுவது எப்படி என்பது ஒரு கலை. அதிலும் எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். என்ன விசயங்கள் பேசலாம்,எவற்றைப்பேசக்கூடாது என்பது பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.
1.பழைய காதலியின் நினைப்பு அடிக்கடி உங்களுக்கு வரலாம். பல சுவையான சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள் உங்களுக்கும் பழைய காதலிக்கும் இடையில் நடந்திருக்கலாம். ஆர்வக்கோளாரில் பந்தாவா மனைவியிடம் அதையெல்லாம் அவிழ்த்து விடக்கூடாது. அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு 1000 கேள்வி கேப்பாங்க பிரதர்!! மண்டை காஞ்சு போவீங்க.
2.பழைய காதலியின் நினைவுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்காதீர்கள் நண்ப்ர்களே.அந்தமாதிரி பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் உடனே அழித்துவிடுங்கள்! புகைப்படம்,வீடியோ,சிடியிலிருந்து பல பிறந்தநாள் பரிசு வரை காலிபண்ணிவிடுங்க. ஏன்னா எப்ப உங்க மனைவி சி.பி.ஐ ஆ மாறுவாங்கன்னு தெரியாது.
3.நம்ம நல்ல பேர் வாங்குவதற்காக நம் நண்பர்களின் குறைகளை மனைவியிடம் சொல்லக்கூடாது. “என் பிரண்டு ஒருத்தி இருந்தா.. அவ ரொம்ப மோசங்க!!” ன்னு ஒரு கொக்கி போடுவாங்க! உஜாரூ மாமே!! வாயத்தொற்க்கக்கூடாது...அதுவும் நமக்கு கம்பெனி கொடுக்கும் ”குடி”நண்பர்களைப் பற்றி பேச்சே கூடாது!!
4.உங்களுடைய பலவீனங்களை அவர்களே தெரிந்து கொள்ளட்டும். பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள். தைரியம் என்பது பயத்தை மறைத்துக்கொள்வதுன்னு சொல்லுவாங்க...எல்லா பயத்தையும் சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்திலிருந்து இதைக்கடைப்பிடித்தால் நீங்கள்தான் உங்கள் மனைவியின் ராஜா.. துணிந்து தாக்குங்க மச்சி!!
5.உங்கள் மனம் கவர்ந்த மங்கை உங்களை சொந்தக்காலில் நிற்பவர் அவரே தைரியமாக முடிவெடுப்பவர் என்று எண்ணுவார்கள். அதைத்தான் விரும்புவார்கள்..ஆனாலும் வயதில் மூத்தவர்களின், அப்பா,அம்மாவின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை. சிலநேரங்களில் உங்கள் கைச்செலவு, சாப்பாடு, பெட்ரோல் எல்லாமே பெற்றோர் தயவில்தான் ஓடும். ஆனால் காதலியிடம் இதையெல்லாம் வாய் திறக்கக் கூடாது.
6.கிடைக்கும் எல்லாப் பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிட்டுக் கையேந்தக்கூடாது. சம்பளம் இவ்வளவு என்று காதலிக்குத்தெரியலாம். ஆனா செய்யுகின்ற எல்லா செலவுக்கும் சின்னப்பையன்போல் கணக்குச்சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். எவ்வளவு நண்பர்களுக்கு, அப்பா அம்மாவுக்கு, சுற்றுலாவுக்கு, செலவழிக்கிறீர்கள் என்று விலாவரியாக சொல்லவேண்டாம்!!!
புதிய உறவுகள் ஆரம்பிக்கும்போது திறந்த மனதுடன் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்வது நல்லது என்பார்கள். உண்மைதான்!! ஆனால் அதுவே பின்னாளில் பெரிய பிரச்சினை ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பித்தில் எல்லாமே நல்லதாகத்தெரியும். பின்னாளில் பிரச்சினை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்!!!
என்ன சரிதானா. இது ரொம்ப பெரிய விசயம். ஆனாசுருக்கமா உங்களுக்கு தந்துள்ளேன்.

Wednesday, July 1, 2009

மனைவியின் தாக்குதல்களுக்கு கணவரின் பதில் பாடல்கள்!

மனைவியின் தாக்குதல்களுக்கு கணவரின் பதில் பாடல்கள்!

மனைவி கேக்குற கேள்விகளுக்கு எல்லாம், கணவர் பாடலிலேயே பதில் சொன்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.
சும்மா நகைச்சுவைக்காக மட்டும் : )


மனைவி : கடைக்கு போய்ட்டு ஒரு நல்ல தக்காளி வாங்கிட்டு வர தெரியல, தண்ணி கேன் எடுத்து ஊத்த தெரில, கடைத்தெருவுக்கு போய் விலை பேச தெரில, குழந்தை கூட உட்கார்ந்து ஹோம் வொர்க் செய்ய வைக்க தெரில, ஆத்திரம் அவசரம்னா ஒரு தோசை சுட தெரில...ஏன் ஒரு மேக்கி கூட செய்ய தெரில....


கணவன் :


பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது..
அப்படி பொறந்துவிட்டா பொம்பளைய நினைக்கக் கூடாது...



மனைவி : எவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் என்னை கல்யாணம் பண்ணிக்க வந்தாங்க...அவங்கள எல்லாம் விட்டுட்டு உங்கள போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாருங்க.....எல்லாம் என் தலையெழுத்து...


கணவன்:

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று....




மனைவி : என்ன திட்டினாலும் கேக்க மாட்றீங்க...இப்படியே வாரத்துல 2 நாளு குடிச்சிட்டு வர்றீங்களே...சரி அப்படியே குடிச்சிட்டு வந்தாலும், அமைதியா இருந்தா பரவால்ல....உங்க மொக்கையை யாரு தாங்குறது....இன்னிக்கு ஒரு நாள் வெளியவே படுங்க..(தடக் என கதவை அடைத்து, மனைவி வெளியே தள்ளிட்டாங்க)

கணவன் :
"வாடி பொட்ட புள்ள வெளியே...
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..."

"இரவினில் ஆட்டம்.....
பகலினில் ஓட்டம்..
இது தான் எங்கள் உலகம், எங்கள் உலகம்..."

"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இதில் நீயேன்ன...
அடியே நானேன்ன ஞானப் பெண்ணே..
வாழ்வின் பொருளென்ன...
நீ வந்த கதை என்ன?"


மனைவி : இப்படியே ஆபீஸ் வேலைன்னு, குடும்பத்தை, பசங்கள கவனிக்காம சுத்திட்டே இருந்தீங்கன்னா...வயசான காலத்துல நம்ம புள்ளைங்க நம்மல கவனிக்காம போய்டுவாங்க.... நான் சொல்றது உங்க புத்தில, ஏறுதா இல்லையா...?

கணவன்:
"வீடு வரை உறவுவீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ......
கடைசி வரை யாரோ......"


மனைவி: பொண்ணு பாக்க வரும் போதே, என்னை விட என் பக்கதுல இருந்த பொண்ண பல்ல இளிச்சுட்டு பார்த்த போதே நினைச்சேன்...இந்த மாதிரியான ஆளு நமக்கு தேவையான்னு நினைச்சேன்....இருந்தாலும் ஏதோ லைட்டா தடுமாறிட்டேன்...இப்ப உங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்..*&%##########$%^%$$##$%%^$#$$

கணவன் :
சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக்குள்ள யாருமில்ல, எந்த நெஞ்சும் ஈரம் இல்ல
சம்சாரம்....
நேரம் வந்து நெருங்கி தொட்டா ஷாக் அடிக்கிற மின்சாரம்...



மனைவி : ஏங்க..ரெண்டு நாளு நான் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன்...அடக்கமா இருங்க....ரெண்டே நாள்ல திரும்பி வந்துடுவேன்..ஆளில்லன்னு ஆட்டம் போடாதீங்க...

கணவன்:
"அட்றாட்றா நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..
ஏய் மாடு செத்தா, மனுஷன் தின்னா, தோள வச்சி மேளம் கட்டி,
அட்றாட்றா நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா.."

"ஹேப்பி...இன்று முதல் ஹேப்பி...
ஹேப்பி...இன்று முதல் ஹேப்பி..."



மனைவி : இந்த மாதிரி ஏடாகுடமாவே பேசிட்டு இருக்கீங்களே...என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க என்னை பத்தி?

கணவன்:
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம், கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன......
காதல் வாழ்க....
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் !


கடைசியா கொஞ்சம் சமாதானமா முடிச்சுக்குறது தான் கணவர்களுக்கு பாதுகாப்பு !


சும்மா சிரிப்புக்காகவும், பொழுது போக்குக்காகவும் மட்டும் இந்த பதிவு !